WHAT IS GOONDAS ACT ???
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhW75uRUQG9cAd9DlOnH3s7UD47z7Y_fAs_yIpa72x5DGFd8UmnBf79X3lwYCYHcxr9gTAouYimzdvODovD0c0bFeWUP3wxI__mcJFgWybb_RtWpgvB813LdYNpOAP4QBLWfj5_u2OwXXY/s1600/1679047248687659-0.png)
GOONDAS ACT குண்டாஸ் சட்டம் என்பது தொடர் குற்றங்களை தடுக்கும் பொருட்டு குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யும் அதிகாரம் இச்சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக மதுவைத் தயாரிப்பது விற்பனை செய்வது , பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் காரியங்களைச் செய்வது, வன்முறையைத் தூண்டுவது, கடத்தல் காரியங்களில் ஈடுபடுவது, வழிப்பறியில் ஈடுபடுவது போன்ற தவறான காரியங்களைச் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கவும், கடுமையான தண்டனைகளை வழங்கவும் ஏதுவாக வலுவானதொரு சட்டத்தைக் கொண்டுவர விரும்பினார் அன்றைய முதலமைச்சர் எம் ஜி ஆர் . 1982 ஆம் ஆண்டு இந்த சட்டம் அரசு உயரதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் நடத்திய விரிவான ஆலோசனைக்குப் பிறகு இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது . மேலும் 2004 ஆம் ஆண்டு திருட்டு வி சிடி குற்றத்தில் ஈடுபட்டவர் மீதும் குண்டாஸ் போடலாம் என்று சேர்க்கப்பட்டது. 2006 ல் மணல் கடத்தல் ,குடிசை நிலம் அபகரித்...