WHAT IS GOONDAS ACT ???

               

GOONDAS ACT 


 
குண்டாஸ் சட்டம் என்பது தொடர் குற்றங்களை தடுக்கும் பொருட்டு குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யும் அதிகாரம் இச்சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. 

     சட்ட விரோதமாக மதுவைத் தயாரிப்பது விற்பனை செய்வது,
 பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் காரியங்களைச் செய்வது, வன்முறையைத் தூண்டுவது, கடத்தல் காரியங்களில் ஈடுபடுவது, வழிப்பறியில் ஈடுபடுவது போன்ற தவறான காரியங்களைச் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கவும், கடுமையான தண்டனைகளை வழங்கவும் ஏதுவாக வலுவானதொரு சட்டத்தைக் கொண்டுவர விரும்பினார் அன்றைய முதலமைச்சர் எம் ஜி ஆர் .

  1982 ஆம் ஆண்டு இந்த சட்டம்
அரசு உயரதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் நடத்திய விரிவான ஆலோசனைக்குப் பிறகு இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது . 

  மேலும் 2004 ஆம் ஆண்டு திருட்டு வி சிடி குற்றத்தில் ஈடுபட்டவர் மீதும் குண்டாஸ் போடலாம் என்று சேர்க்கப்பட்டது.

   2006 ல் மணல் கடத்தல் ,குடிசை நிலம் அபகரித்தல் குற்றமும் சேர்க்கப்பட்டது .

   தண்டனை என்ன ??


ஒருவர் மேற்கூறிய குற்றம் (சட்டப் பிரிவுகள் 16, 17, 22, 45) எதையாவது செய்யக்கூடியவர் அல்லது செய்யக்கூடிய குழுவைச் சேர்ந்தவர் என்று கருதினாலே அவர்களை இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க முடியும்


   இந்த சட்டத்தின்படி ஒருவர் கைது செய்யப்பட்டால், அவர் 12 மாதங்கள் தொடர்ந்து சிறையில் அடைக்க முடியும். அவரிடம் எந்தவித விசாரணையும் மேற்கொள்ளத் தேவையில்லை, அவர்களுக்கு பிணையும் bail  வழங்கப்படாது. 
அவர்களை விடுவிப்பது குறித்து மாநில அரசு முடிவு செய்தால், முன்கூட்டியே விடுவிக்கவும் சட்டத்தில் இடமுள்ளது.

இந்த சட்டத்தின்கீழ் கைது செய்யப்படும் ஒருவர், தன்மீது குற்றமில்லை என்று நிரூபிக்க விரும்பினால் கைதானவர் சார்பில் வழக்கறிஞர் வாதிட இயலாது. அவர் சார்பாக அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான், முறையீட்டு குழுவைத்தான் அணுக வேண்டும். இந்த விசாரணை குழுவானது, ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி, ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி, ஒரு அமர்வு நீதிபதி ஆகியோரைக் கொண்டு அமைக்கப்படும். இந்த குழுவினர் விசாரித்து, சம்பந்தப்பட்ட நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டது சரியா என்பது குறித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை அளிக்கும். அதைத்தொடர்ந்து அவர் மீதான நடவடிக்கை தொடரும்.

அதேநேரத்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட நபர், அவருக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மீறினால், அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கலாம் என்றும் சட்டத்தின் ஷரத்து கூறுகிறது.

   - mohamed kabeer fais BA LLB 


.



Comments

Popular posts from this blog

கல்வி கற்பதற்கான உரிமை பற்றிய சட்டம்