கல்வி கற்பதற்கான உரிமை பற்றிய சட்டம்

  



 கல்வி கற்பதற்கான உரிமை



இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு -21 A 

    கல்வி கற்பதற்கான உரிமையை பற்றி பேசுகின்றது 
 ( Right to education)

  அந்த பிரிவு கூறுவது என்னவென்றால் 6 முதல் 14 வயதுள்ள சிறார்கள் அனைவருக்கும் அரசு , சட்டத்தின் வாயிலாக தீர்மானிக்கும் முறையில் இலவச கட்டாய கல்வி அளிக்க அரசு ஏற்பாடு செய்தல் வேண்டும்.  
 
   இந்த பிரிவு 21 அ கட்டாய கல்வியை வலியுறுத்துகின்றது.


      பாகுபாடு காட்டக்கூடாது



  1949 இந்திய அரசியலமைப்பில் பிரிவு 15 ஆகிய பிரிவுகள் கூறுவது இந்தியாவில் மதம் இனம் சாதி பாலினம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை தடை செய்கின்றது.

         1. மதம் இனம் ஜாதி பாலினம் பிறந்த இடம் அல்லது அவற்றில் ஏதேனும் ஒன்றின் அடிப்படையில் மட்டும் எந்த குடிமகனுக்கும் அரசு பாகுபாடு காட்டக் கூடாது.
 
 2. எந்த குடிமகனும் மதம் இனம் சாதி பாலினம் பிறந்த இடம் அல்லது அவற்றில் ஏதேனும் ஒன்றில் அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது. 

  
   

Comments