FIR என்றால் என்ன ??யார் மீது FIR போடலாம்??

முதல் தகவல் அறிக்கை





ஒருவர் குற்றம் செய்தால் அவர் மீது நாம் போலலீஸிடம் புகார் அளிப்போம் .
 அந்த புகாரை போலிஸ் குற்றத்தினுடைய தன்மைக்கு ஏற்றார்போல் பதிவு செய்வார்கள் 
   அதற்கு FIR எனப்படும் 
 
FIR என்றால் First information report 
முதல் தகவல் அறிக்கை .

Crpc 1973 Sec 154 இல் FIR சம்பந்தமாக குறிப்பிட்டு இருப்பார்கள் .

மேலும் எந்த குற்றத்திற்காக FIR போட வேண்டும் என்றும் அடுத்த அடுத்த section யில் குறிப்பிட்டு இருப்பார்கள்.
 
யார் புகார் அளிக்கலாம்
 

  *  ஒரு குற்றம் நடக்கின்றது என்று சொன்னால், அந்த குற்றத்தால் பாதிக்கப்பட்டவர் victim 

   *மேலும் அந்த குற்றத்தை பார்த்த சாட்சியாளர் Witness.
 
  *மேலும் அந்த குற்றத்தால் பாதிக்க கூடும் என்ற ஒரு பொதுவான மனிதர் common man ஆகியோர் புகார் அளிக்கலாம்.

    எந்த குற்றத்திற்காக FIR 

குற்றம் என்பது இரண்டு வகையாக பிரிக்கின்றார்கள் 
 
தீவிரமான குற்றம் (cognizable offences)

தீவிரமற்ற குற்றம் (Non cognizable offences) 
 இதை crpc 1973  section 154 மில்  தொடர்படியாக கூறியிருப்பார்கள்.

    ஒரு குற்றம் நடந்து ஒருவர் போலீஸிடம் புகார் அளிப்பதற்காக செல்கின்றார் , போலீஸ் அந்த குற்றத்தினுடைய தன்மையை ஏற்றார் போல் புகாரை பதிவு செய்வார்கள். 

  அந்த குற்றம் தீவிரமான குற்றமாக இருந்தால் (cognizable offences)

 போலிஸ் புகார் அளித்தவருடைய குற்றத்தின் தன்மையை ( Nature of offence )ஆராய்ந்து FIR பதிவு செய்வார்கள் . 
    மேலும் அந்த குற்றம் தீவிரமற்ற குற்றமாக இருந்தால்( Non cognizable offence) இருந்தால் 
 போலீஸ்  CSR யில் பதிவு செய்வார்கள் .
 CSR என்றால் community service register 
போலீஸ் பதிவு செய்யும் குறிப்பு புத்தகம் (Diary)
  மேலும் பதிவு செய்த பதிவை (receipt ) போலீஸ் கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.
 ‌
FIR  ஆக இருந்தாலும் அதே போல தான் ஒரு நகலை (copy ) கொடுக்க வேண்டும்.

போலீஸ் FIR பதிவு செய்வதை மறுத்தால் நாம் நேரடியாக நீதிமன்றத்தை(court ) அனுகலாம்.

 அதன் பிறகு  அந்த வழக்கினுடைய தகவலை குற்றப்பத்திரிக்கை யில்( Chargesheet )கொண்டு வர வேண்டும் . 
பிறகு நீதிமன்ற நடவடிக்கை நடக்கும் .
 
  - Mohamed Kabeer Fais BA ,LLB


  


Comments

Popular posts from this blog

கல்வி கற்பதற்கான உரிமை பற்றிய சட்டம்